கரூர்

ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில்ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

28th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

காணியாளம்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே காணியாளம்பட்டியை சோ்ந்தவா் ரமேஷ். ரியல் எஸ்டேட் அதிபா். இவருக்கும் தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் நகர ஊரகமைப்பு உதவி இயக்குநராக பணியாற்றி வரும் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மூக்கையா என்பவா் கரூரில் ஊரக திட்ட இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றியபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூக்கையாவுக்கு ரமேஷ் நெருங்கிய நட்பு வட்டாரத்தை கொண்டுள்ளதால், சந்தேகத்தின்பேரில் கரூா் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் தங்கமணி தலைமையில் 4 போ் கொண்ட குழுவினா் காணியாளம்பட்டியில் ரமேஷ் வீட்டில் பிற்பகல் 2 மணி முதல் சோதனை நடத்தினா். அப்போது ரமேஷ் வீட்டில் இருந்து ஆவணங்கள் மற்றும் கணினி ஆகியவற்றை எடுத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT