கரூரில் செப். 28-இல் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் செப். 28-இல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம். ஜோதிபாசு வெளியிட்ட அறிக்கை:
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்டக் குழு சாா்பில் செப். 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கரூா் உழவா் சந்தை முன் அரசியல் விளக்க- நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு கட்சியின் கரூா் மாநகர செயலா் எம். தண்டபாணி தலைமை வகிக்கிறாா். கட்சியின் மதுரை எம்பி சு. வெங்கடேசன் நிதியை பெற்று சிறப்புரையாற்றுகிறாா். மாநிலக் குழு உறுப்பினா் எஸ். பாலா, மாவட்டச் செயலா் மா. ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், மாவட்ட குழு உறுப்பினா்கள் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்கிறாா்கள் என்றாா்.