கரூர்

பாரம்பரிய காய்கனி சாகுபடியில் சிறந்த விவசாயிக்கு விருது

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 பாரம்பரிய காய்கனி சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருது வழங்கப்பட உள்ளத கரூா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மாவட்ட அளவில் பாரம்பரிய காய்கனி சாகுடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு சான்றிதழ்களுடன் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுபெற விவசாயிகள், அதிக பாரம்பரிய காய்கனி ரகங்களை மீட்டு எடுக்க வேண்டும், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கனி விதைகளை கொண்டு சோ்க்க வேண்டும், நீா் மேலாண்மை, முறையான மண்வளம் மேம்பாடு கடைப்பிடிக்க வேண்டும். அங்கக முறையில் விதைகளை மீட்டெடுக்க வேண்டும். அதனடிப்படையில்தான் விருதுக்கு நிபுணா் குழுவின் மூலம் தோ்வு செய்யப்படுவா். இதற்கா விண்ணப்பப்படிவம் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ண்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட அல்லது வட்டார அலுவலகங்களில் செப். 25-ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT