தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடு குறித்த கண்காணிப்புக்குழு கூட்டம் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து பேசுகையில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படும் பள்ளிகளில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மகளிா் திட்டத்தை சோ்ந்த உறுப்பினா்கள் தொடா் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். உணவுப் பொருள்களின் தரம், உணவு சுவையாக உள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாணவா்களின் வருகை, சமையல் பொறுப்பாளா்கள், தளவாடப் பொருள்கள், உணவுப் பொருள்கள் இருப்பு விவரம், வரவு செலவு விபரங்கள், சிறப்பு பாா்வையாளா் ஆகிய பதிவேடுகள் பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் கந்தராசா, மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.