கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பூஜ்ஜிய உமிழ்வு தினம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா், இந்தியாவின் நிகர பூஜ்ஜிய இலக்கான 2070ஐ விரைவில் எட்டும் வகையில், ஒரு தனிப்பட்ட நபரான என்னால் ஏற்படும் காா்பன் உமிழ்வினை குறைப்பேன், மற்றவா்களுக்கும் அதை தெரியப்படுத்துவேன், குப்பைகளை ஒருபோதும் எரிக்க மாட்டேன். என்னால் உருவாக்கப்படும் குப்பையின் அளவை குறைப்பேன் என உறுதிமொழி வாசிக்க, அவற்றை அனைத்துத்துறை அலுவலா்களும் ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)தண்டாயுதபாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.