அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்சோதனை ஆய்வு செய்தனா்.
பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் பால்ராஜ் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள், நகராட்சியின் துப்புரவு ஆய்வாளா்கள் மற்றும் நகராட்சி ஊழியா்கள் அசைவ உணவகங்களில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 12 கிலோ தரமற்ற சிக்கன், 15 கிலோ பன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.