கரூர்

பணம் வைத்து சேவல் சண்டை:இருவா் கைது

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அரவக்குறிச்சி அருகே சேவல் சண்டை நடைபெறுவதாக அரவக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு தலைமையிலான போலீஸாா் அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வெரிச்சனம்பட்டி பகுதியில் முள்காட்டில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி சௌந்தராபுரம் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (25), பாப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த அன்புமணி (25) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் சேவல் சண்டைக்கு பயன்படுத்திய இரண்டு சேவல்கள் மற்றும் ரூ.500ஐ பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT