கரூர்

அதிமுக-பாஜக பிளவுக்கு சமரசம் செய்ய தூது செல்லவில்லை: ஜிகே.வாசன் மறுப்பு

1st Oct 2023 02:36 PM

ADVERTISEMENT

அதிமுக-பாஜக பிளவுக்கு சமரசம் ஏற்படுத்த நான் தூது செல்லவில்லை என்றார் தமிழ்மாநில காங்.கட்சியின் தலைவர் ஜிகே.வாசன்.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை காலை செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது, கர்நாடகா அரசு டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறது. கர்நாடகா அரசு காவிரி ஆணையத்திற்கு மரியாதை கொடுக்கவில்லை. இதுவரை தமிழகத்திற்கு 50 சதவீதம் அளவு கூட தண்ணீரை வழங்கவில்லை. கர்நாடகா அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தண்ணீர் தரக்கூடாது என்று வலியுறுத்துகிறார்கள். 

ஆனால், இதைப் பார்த்துக்கொண்டு தமிழக அரசு மௌனமாக இருக்கிறது. கர்நாடக முதல்வரிடம் போனில் பேசும் தமிழக முதல்வர் தில்லி சென்று தண்ணீர் கேட்டு இருக்கலாம். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது. விவசாயிகள் விவகாரத்தில் கௌரவம் பார்க்கக் கூடாது. கர்நாடக அரசுடன் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக முதல்வர் நேரில் சென்று பேச வேண்டும். அதிமுக பாஜக- பிளவு ஏற்பட்டு உள்ளது. 

இதையும் படிக்க- அக்.26-இல் ஆளுநர் மாளிகை முற்றுகை: எம். எச். ஜவாஹிருல்லா

ADVERTISEMENT

இரண்டு கட்சிகளையும்  நான் சமாதானம் செய்வது என்று வந்த தகவல் பொய். தேர்தல் நேரத்தில் நாட்டுநலன், கட்சி நலன் போன்றவை குறித்து ஆராய்ந்து பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். ஐஎன்டிஏ கூட்டணிக்குள்ளே பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. திமுகவின் குறுகிய கால ஆட்சியில் அதிக கடன் பெற்றிருக்கிறது.  கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது.

வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த நிலையில்தான் மக்களின் நிலை உள்ளது. விவசாயிகளுக்காக நாங்கள் எந்தநிலையிலும் போராடத் தயாராக இருக்கிறோம். ஆனால் இருமாநில மக்களுக்கும் இடையே பிரச்னைகளை அதிகரித்துவிடக்கூடாது, சமூகமாக முடியும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.


 

Tags : karur Gkvasan
ADVERTISEMENT
ADVERTISEMENT