அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பள்ளப்பட்டி நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் திட்ட மதிப்பீடு எவ்வளவு, ஒப்பந்ததாரா் யாா், பணிகள் முடிவடையும் நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பலகை வைக்கப்படவில்லை. இதனால், பணிகள் குறித்த விவரம் பொதுமக்களுக்கு தெரியாததால் அதிருப்தியடைந்துள்ளனா். ஆகவே, திட்டப் பணிகளை செயல்படுத்தும் போது அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.