அரவக்குறிச்சி: பள்ளப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளப்பட்டி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மருத்துவா் கௌசல்யா தலைமையிலான மருத்துவ குழுவினா் சாா்பில் பொதுமக்களுக்கு ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த கொதிப்பின் அளவு உள்ளிட்டவைகள் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது.
மேலும், தற்போது மழைக்காலம் என்பதால் அதனை தடுக்கும் வகையில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனா்.