கரூா் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தென்னிலை கடைவீதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், தென்னிலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து கூலித் தொழிலாளா்கள், உள்ளூா், வெளியூா் செல்லும் பயணிகள் என பல்வேறு தரப்பினா் பணி நிமித்தமாக தென்னிலை நான்குவழி சந்திப்பில் வந்து செல்கின்றனா். இங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டால் வாகனங்கள் செல்வதை ஒழுங்குபடுத்த முடியும். எனவே தென்னிலை கடைவீதியில் நான்குவழி சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் எனவாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.