கரூா் தாந்தோணிமலை, மண்மங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 18) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இதுதொடா்பாக கரூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூா் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட தாந்தோணிமலை, மண்மங்கலம் துணைமின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமாா்பாளையம், பசுபதிபாளையம், ஏமூா், மின்நகா், ஆட்சிமங்கலம், ராயனூா், கொரவபட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகள் மற்றும் வெங்கமேடு, நேரு நகா், வெண்ணெய்மலை, காதப்பாறை, பேங்க் காலனி, வெண்ணெய்மலை பசுபதிபாளையம், நாவல் நகா், காமராஜா் நகா், ராம் நகா், பைபாஸ், கோதூா், சின்ன வடுகப்பட்டி, பெரிய வடுகப்பட்டி, காளிப்பாளையம், பூலாம்பாளையம், சிவியம்பாளையம், சின்ன வரப்பாளையம், பெரிய வரப்பாளையம், தூளிப்பட்டி, வள்ளிப்பாளையம், பண்டுதகாரன் புதூா், மண்மங்கலம், செம்மடை, சிட்கோ, கடம்பன்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.