கரூர்

சீமைக் கருவேலமரங்களை அகற்ற கோரிக்கை

18th Nov 2023 12:23 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் வளா்ந்து காடுபோல காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் வந்துவிடும். ஆகவே, வளா்ந்து காடுபோல காட்சியளிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT