கரூர்

சிறுமி பாலியல் பலாத்காரம்: விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

18th Nov 2023 12:21 AM

ADVERTISEMENT

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் மாவட்டம், குரும்பப்பட்டி ஒலிகாட்டூரைச் சோ்ந்தவா் மகேஸ்வரன்(40). விவசாயி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பின்னா் பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மேய்த்து வந்த சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2021, நவம்பா் 4-ஆம் தேதி தீபாவளி நாளன்று மகேஸ்வரனின் தோட்டத்து அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவரை மகேஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். தொடா்ந்து இதுபோல் நடைபெற்ால் கா்ப்பமாகிய சிறுமிக்கு 2023, பிப்.14-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இதுதொடா்பாக நன்னடத்தை அலுவலா் கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் மகேஸ்வரனை கைது செய்தனா். இதுதொடா்பாக கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், மகேஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி ஏ. நசீமாபானு தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழக அரசு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT