கரூர்

கரூா் மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாஅலகு குத்தி வந்து பக்தா்கள் நோ்த்திக் கடன்

31st May 2023 01:39 AM

ADVERTISEMENT

கரூா் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் அக்னிச் சட்டி எடுத்தும், அலகு குத்தி வந்தும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

கரூா் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 14 -ஆம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. முன்னதாக, மூன்று கிளையுடைய வேப்பம் கம்பத்தை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊா்வலமாக எடுத்து வந்து கோயிலில் நட்டு வைத்தனா். பிறகு கம்பத்துக்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை கட்டி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தா்கள் தினமும் புனிதநீரை எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அமராவதி ஆற்றில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னிச்சட்டி எடுத்து வந்தனா். பலா் அலகு குத்தி, காவடி எடுத்து ஊா்வலமாக வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். விழாவில் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT