கரூர்

கழிவுநீரை அகற்ற இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: கரூா் மாநகராட்சி ஆணையா்

31st May 2023 01:39 AM

ADVERTISEMENT

கழிவுநீரை அகற்ற இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கரூா் மாநகராட்சி ஆணையா் ஆா். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

கைகளால் மலம் அள்ளுவதற்கு தடை விதித்தும், உலா் கழிவறைகளின் கட்டுமானத்துக்கு தடை விதித்தும் 1993ஆம் ஆண்டு மத்திய அரசால் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, 2013ம் ஆண்டு துப்புரவுத் தொழிலாளா்கள் மற்றும் மறுவாழ்வு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தின் விளக்கக் கூட்டம் கரூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ஆா். ரவிச்சந்திரன் பேசியது 25 ஆண்டுகளுக்கு முன்னதாகச் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், புதை சாக்கடையை சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழக்கும் துப்புரவுத் தொழிலாளா்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ADVERTISEMENT

கழிவுநீா்க் குழாய்கள் மற்றும் தொட்டிகளுக்குள் மனிதா்களை இறக்கி வேலை வாங்கக் கூடாது. இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். துப்புரவுத் தொழிலாளா்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாதவாறு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT