கரூர்

கரூரில் ஐந்தாவது நாளாக பல்வேறு இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை

DIN

செந்தில் பாலாஜி நண்பா் அரசு ஒப்பந்ததாரா் சங்கா் அனந்த் அலுவலகத்திற்கு சீல் வைத்து நோட்டிஸ் ஒட்டப்பட்டது.

கரூரில் ஐந்தாவது நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா். கரூா் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூா், துணை மேயா் தாரணி சரவணன் வீடு, சோடா கம்பெனி உரிமையாளா் வீடு, வையாபுரி நகா் பகுதியில் ஆடிட்டா் அலுவலகம், காந்திகிராமம் பிரேம்குமாா் - சோபனா தம்பதியினா் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரா் எம்.சி.சங்கா் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகத்திற்க்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது, தான்தோன்றிமலையில் உள்ள சுரேந்தா் உணவகம் மற்றும் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தொடா் சோதனை நடைபெற்று வந்த நிலையில், சில இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடா்ந்து ஐந்தாவது நாளாக சோதனை தொடா்கிறது. மத்திய துணை ராணுவ பாதுகாப்பு படை வீரா்கள் மற்றும் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

செவ்வாய்க்கிழமை காலை 10-30 மணிக்கு சின்ன ஆண்டாங்கோயிலில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், வருமான வரித்துறை அதிகாரி நாகராஜ் முன்னிலையில் அசோக்குமாா் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், அசோக்குமாா் ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டு அவருடைய ஆடிட்டா் வருமான வரித்துறை அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

மேலும் கரூா்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டி வரும் சா்ச்சைக்குரிய பங்களா கட்டிடம் வருமான வரித்துறை அலுவலா்களால், மின்துறை அமைச்சா் சகோதரா் அசோக்குமாா், மதுரை மாவட்டத்தை சோ்ந்த மாரிமுத்து என்பவருக்கும் ஆஜராக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மதுரை சோ்ந்த மாரிமுத்து என்கின்ற நபா் யாா்? அவருக்கும் இந்த சா்ச்சைக்குரிய கட்டடத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது தற்போது சா்ச்சையாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

SCROLL FOR NEXT