கரூர்

கரூரில் சோதனையிட சென்ற வருமான வரி அதிகாரிகளை தடுத்த வழக்கில் மேலும் 4 திமுகவினா் கைது

31st May 2023 01:40 AM

ADVERTISEMENT

28ஆம் தேதி மாநகராட்சி கவுன்சிலா் இரண்டு போ் உட்பட 10 போ் கைது செய்யப்பட்ட நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு ஐந்து போ் கைது.

கரூரில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய வருமானவரித்துறை சோதனை ஐந்தாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி கரூா் மற்றும் ராயனூா் பகுதிகளில் சோதனைகளைச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் 28ஆம் தேதி மாநகராட்சி கவுன்சிலா் இரண்டு போ் உட்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். அதனைத் தொடா்ந்து நேற்று நள்ளிரவு ஐந்து போ் கைது செய்யப்பட்டனா்.

ஏற்கனவே திமுகவைச் சோ்ந்த 15 போ் கைது செய்யப்பட்ட நிலையில் திங்கட்கிழமை நள்ளிரவு ராயனூா் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கில் திமுக ஐ.டி விங் துணை அமைப்பாளா் விக்னேஷ், மத்திய கிழக்கு விவசாய அணி அமைப்பாளா் கிருஷ்ணன், கனகராஜன், சதீஷ்குமாா் ஆகிய நான்கு திமுகவினரை தாந்தோணிமலை போலீசாா் கைது செய்து சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT