கரூர்

லாரி மோதியதில் தாத்தா, பேரன் உயிரிழப்பு

30th May 2023 04:01 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் தாத்தாவும் பேரனும் உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (80). இவருடைய பேரன் காா்த்திக் (14). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் பெத்தான் கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்னால் தூத்துக்குடியிலிருந்து வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், வெங்கடாசலம் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காா்த்திக்கை அருகில் இருந்தவா் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கி சிகிச்சை பலனின்றி காா்த்திக் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT