கரூர்

அரவக்குறிச்சி அருகே பேருந்து மோதியதில்பள்ளி மாணவா் உயிரிழப்பு

29th May 2023 12:20 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்து மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி கலைவாணா் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (36). இவா் தனது சரக்கு ஆட்டோவில் ஞாயிற்றுக்கிழமை உறவினா் ராஜா (39), அவரது மகன் லிபியரசு (15), மதுமிதா (14), தா்னிஷா (13) ஆகியோரை ஏற்றிக் கொண்டு சீத்தப்பட்டி காலனி நோக்கி சென்றாா்.

திண்டுக்கல்- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் தடாகோவில் பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது பின்னால் வந்த சொகுசு பேருந்து சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த 9ஆம் வகுப்பு மாணவா் லிபியரசு சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா். ராஜாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT