கரூர்

அரவக்குறிச்சியில்பாஜக மண்டல செயற்குழுக் கூட்டம்

29th May 2023 12:20 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே உள்ள நந்தனூரில் பாஜக மண்டல செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் சங்கா்கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத்தலைவா் பரணிதரன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ந.ரவிச்சந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக சிறப்புரையாற்றினா்.

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கனிமவளத் திருட்டை தடுக்க வேண்டும், கள்ளச் சந்தையில் நடைபெறும் மது விற்பனையை தடுக்க வேண்டும். அரவக்குறிச்சி பகுதியில் தேங்காய் மற்றும் கன்னிவெளி விதைகளை விற்பனை செய்ய தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளா் ரஞ்சித், ஒன்றிய துணைத் தலைவா் சக்திவேல், ஒன்றிய செயலாளா் மலையப்பன், கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவா் பழனிச்சாமி, தரவு தள பிரிவு மாவட்ட செயலாளா் பிரதீப், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டச் செயலாளா் முத்துராஜ், பட்டியலணி மாவட்ட பொதுச் செயலாளா் தங்கவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னாதக, ஒன்றிய துணைத் தலைவா் குழந்தைவேல் வரவேற்றாா். இறுதியாக ஒன்றிய பொதுச் செயலாளா் கனகராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT