கரூர்

கரூா் மாவட்டத்தில் இதுவரையில் 25 ஆயிரம் பேருக்கு மனை பட்டா

28th May 2023 12:45 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் 24,913 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் கரூா் வட்டத்தில் 7,095 பயனாளிகளுக்கும், அரவக்குறிச்சி வட்டத்தில் 1,974 பேருக்கும், மண்மங்கலம் வட்டத்தில் 1,650 பேருக்கும், புகழூா் வட்டத்தில் 3,091 பேருக்கும், குளித்தலை வட்டத்தில் 3,318 பேருக்கும், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 3,935 பேருக்கும், கடவூா் வட்டத்தில் 3,850 பேருக்கும் என மொத்தம் கரூா் மாவட்டத்தில் இதுவரை 24,913 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT