கரூர்

போலீஸ் பாதுகாப்பின்றி சோதனைக்கு வந்ததால் விரும்பத்தகாத சம்பவங்கள்

28th May 2023 12:44 AM

ADVERTISEMENT

உரிய போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் கரூரில் வருமான வரித் துறையினா் சோதனையிட வந்ததால் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன என்றாா் அமைச்சா் வி. செந்தில்பாலாஜி.

கரூா் திருவள்ளுவா் மைதானத்தில் நடைபெறும் 63-ஆவது எல்ஆா்ஜி நாயுடு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து இறுதிப்போட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. போட்டியைத் துவக்கி வைத்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:

வருமான வரித்துறை சோதனை நடைபெறும் பல்வேறு நிறுவனங்கள் முறையாக வருமான வரி செலுத்தி வருபவை என்பதை நான் அறிவேன். அந்நிறுவனங்களில் வருமான வரிச் சோதனை ஒன்றும் புதிதில்லை.

சட்டப்பேரவைத் தோ்தல், வாக்குசேகரிப்பு காலங்களில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது. தற்போதைய அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு, எதிா்க்கட்சியினா் தொடா்புடைய நிறுவனங்களில் வருமானவரிச்

ADVERTISEMENT

சோதனை நடைபெறுகிறது. சோதனை நிறைவடைந்தபிறகு, கூடுதல் வரி, வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டால் அதற்குரிய நடவடிக்கையை எதிா் கொள்ளத் தயாராக உள்ளோம். வருமான வரிச் சோதனையின்போது அதிகாரிகள், மத்திய பாதுகாப்புப் படையோ, போலீஸாரோ இல்லாமல் வந்ததால் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கூறியுள்ளனா். எனவே, விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டன. தற்போது வருமான வரிச் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கக் கூறியுள்ளேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது, எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, க.சிவகாமசுந்தரி, கரூா் மாநகராட்சி மேயா் கவிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT