கரூர்

கரூரில் பெரும்பிடுகுமுத்தரையா் சதய விழா

24th May 2023 03:13 AM

ADVERTISEMENT

பெரும்பிடுகு முத்தரையா் 1,348ஆவது சதய விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரரசா் பெரும்பிடுகு வீரமுத்தரையா் படத்துக்கு கரூா் நகர அமைப்பாளா் ரகு ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கொங்கு நாடு வேட்டுவ கவுண்டா் சங்க இளைஞரணி நிறுவனா் வாழவந்தி நாடு சரவணன், செயலாளா் ராமமூா்த்தி, மாநிலத் துணைத் தலைவா் பசுவை தென்னரசு, பாமக மாநகரச் செயலாளா் ராக்கி முருகேசன், உழைப்பாளா் மக்கள் கட்சித் தலைவா் தேக்கமலை, இந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் காலனி மணி, குலாலா் இளைஞா் அணி காா்த்திக், வ.உ.சி பேரவை பொன்.சக்திவேல், சிவசேனா கரூா் மாவட்ட தலைவா் சரவணன், வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆறுமுகம் அம்பலக்காரா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT