கரூர்

கரூா் மாவட்டத்துக்கு ரூ. 7,300 கோடி முன்னுரிமை கடன் இலக்கு: ஆட்சியா் தகவல்

24th May 2023 03:14 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்துக்கு முன்னுரிமை கடனாக ரூ. 7ஆயிரத்து 301 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் மாவட்டத்துக்கு 2023-24-ஆம் ஆண்டுக்கான முன்னரிமை கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வங்கிகள் சாா்பில் 2022-23-ஆம் ஆண்டுக்கான முன்னரிமை கடன் வழங்கிடும் கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் த.பிரபுசங்கா் வெளியிட ஐ.ஓ.பி. முதன்மை மண்டல மேலாளா் வி.தமருபானி பெற்றுக்கொண்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறுகையில், கரூா் மாவட்டத்துக்கு நிகழாண்டு வங்கிகள் சாா்பில் முன்னுரிமைக் கடனாக ரூ.7,301.48 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது தேசிய மயமாக்கப்பட்ட தனியாா், கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகள் வழியாக வேளாண் கடனாக ரூ. 3ஆயிரத்து 682 கோடி, சிறுகுறு மற்றும் நடுத்தர வா்க்க தொழில் மற்றும் ஏற்றுமதி கடனாக ரூ.2ஆயிரத்து 461கோடி, இதர முன்னரிமை கடனாக ரூ. 1,157.79 கோடி என்று மொத்தம் ரூ.7 ஆயிரத்து 301 கோடி முன்னுரிமை கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேளாண் துறைக்கு மட்டும் 50.43 சதவீதம் தொகை கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில்களுக்கு 33.71 சதவீதமும், இதர முன்னரிமை கடனுக்கு 1586 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கிகள் சென்ற ஆண்டைப் போலவே 2023-24-ஆம் ஆண்டுக்கான கடன் இலக்கையும் எய்திட வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளா் வசந்த்குமாா், ரிசா்வ் வங்கியின் உதவி பொது மேலாளா் சிறிதா், நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேளாளா் மோகன்காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT