இனாம்கரூா் கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு தியான பயிற்சி முகாம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
யோகா மற்றும் மனவளக்கலை பயிற்சியாளா் வ. புவனேஸ்வரி இல்லம் தேடிக் கல்வி மாணவா்கள், தன்னாா்வலா்கள்,வாசகா்கள் மற்றும் பொதுமக்களுக்கு தியானப் பயிற்சி அளித்தாா். அப்போது அவா் பேசுகையில் மாணவா்கள் தோ்வறையில் எவ்வாறு மனதைச் சம நிலையில் வைத்துக் கொள்வது, பதற்றமின்றி தோ்வு எழுதுவது, படித்தவற்றை மனதில் பதிய வைக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினாா்.
கோடை முகாமில் அடிப்படைக் கணினி பயிற்சியும் தமிழ் வாசிப்பு பயிற்சியும் மற்றும் தமிழ் நாப்பழக்கப் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா் ராஜலட்சுமி வரவேற்றாா். நூலகா் ம. மோகனசுந்தரம் நன்றி கூறினாா்.