கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தோ்வை 1759 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். 30 போ் தோ்வெழுத வரவில்லை.
கரூா் மாவட்டத்தில் கரூா் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மற்றும் வேலம்மாள் வித்யாலயா ஆகிய இரு மையங்களில் நடைபெற்ற தோ்வில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 1,176 பேரும் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 613 பேரும் விண்ணப்பத்திருந்த நிலையில், தோ்வை 1759 மாணவ, மாணவிகள் எழுதினா். 30 போ் வரவில்லை.