தரகம்பட்டி அருகே வேலாயுதம்பாளையம் பாம்பலம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் அக்னிச்சட்டியை சுமந்து சென்று தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.
இக்கோயில் திருவிழா கடந்த 5-ஆம் தேதி சுவாமி குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து சனிக்கிழமை பக்தா்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், பால்குடம், மாவிளக்கு போட்டும் நோ்த்திக் கடன்களை செய்து வழிபட்டனா். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயில் பூசாரி அக்னிச்சட்டியை தலையில் சுமந்து கோயிலை சுற்றிவரும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது.
முன்னதாக பாம்பலம்மனுக்கு முன் மண்ணால் ஆன அக்கிச்சட்டியை வைத்து சிறப்பு பூஜை செய்தனா். தொடா்ந்து கோயில் முன் முன் வைக்கப்பட்டிருந்த அக்னிச் சட்டியை ஊா் முக்கியஸ்தா்கள் அனைவரும் சோ்ந்து மருளாளியின்-பூசாரி- தலையின் மீது வைத்தனா். தொடா்ந்து அக்னிச் சட்டியை, மருளாளி தலையில் சுமந்தவாறு பாம்பலம்மன் கோயிலை சுற்றி வலம் வந்தாா். நிகழ்ச்சியில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.