கரூர்

கரூரில் நாளை கோடைகாலபயிற்சி முகாம் தொடக்கம்

8th May 2023 01:36 AM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைகால பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இதுதொடா்பாக மைய நூலக அலுவலா் செ.செ. சிவக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோடை விடுமுறையை முன்னிட்டு மாணவ, மாணவிகளிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், தனித்திறனை வளா்க்கவும், அவா்களை நூலகத்துக்கு வரவழைக்கும் வகையிலும் கதை சொல்லுதல், சதுரங்கம், இசை, யோகா, ஓவியம், சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணா்வு போன்ற பல்வேறு பயிற்சிகள் சம்பந்தப்பட்ட துறைகளைச் சாா்ந்த வல்லுநா்களைக் கொண்டு கோடைகால பயிற்சி முகாம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறவுள்ளது. இதை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT