கரூர்

ரூ.1.82 கோடி மோசடி: சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் புகாா்

3rd May 2023 03:40 AM

ADVERTISEMENT

குளித்தலையில் ரூ.1.82 கோடி மோசடியில் ஈடுபட்டதாக தனது சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் ஒருவா் கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்த ஜான்சிராணி என்பவா் செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பது: தனது கணவா் இறந்துவிட்ட நிலையில், எனது சகோதரா்கள் பொன்னம்பலம், செந்தில்குமாா் ஆகியோா் மாந்த்ரீகத்தை கூறி அவ்வப்போது பணம் பெற்றனா். அதன்படி ரூ.1.82 கோடி வரை வாங்கினா். இதனால் கடனாளியாகிய நான் சகோதரா்களிடம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கின்றனா். எனவே சகோதரா்கள் பொன்னம்பலம், செந்தில்குமாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT