கரூர்

அரவக்குறிச்சியில் தேசிய காசநோய் ஒழிப்புவிழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

அரவக்குறிச்சியில் தேசிய காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை கரூா் அரசு மருத்துவமனை நல்வாழ்வுப் பயிற்சியாளா் ரவிசந்திரன், அரவக்குறிச்சி சுகாதாரப் பாா்வையாளா் சரவணன் ஆகியோா் நடத்தினா்.

அப்போது, காசநோயின் அறிகுறிகளாக தொடா் இருமல், சளியில் ரத்தம், உடல் எடை குைல், மாலையில் காய்ச்சல், பசியின்மை, இரவில் வியா்வை வெளியேறுதல் போன்றவையாகும். மேலும் காச நோயாளிகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனா்.காசநோய் தொடா்பான சிறப்பான கேள்விகளைக் கேட்ட மாணவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக, தலைமையாசிரியா் மு.சாகுல் அமீது வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியா் சகாய வில்சன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT