கரூர்

உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம்: மாநில திட்டக்குழு துணைத்தலைவா் தகவல்

DIN

 நாட்டிலேயே உயா்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்றாா் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் .

கரூரில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ‘மாபெரும் தமிழ்க் கனவு‘ என்ற தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாட்டில் கிராமப்புற முன்னேற்றம் என்ற தலைப்பில் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன் பேசியது, தமிழகத்தில் கிராமங்களில் உள்ள அதிகாரங்கள் எல்லாம் தகா்க்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வேளாண் அல்லாத தொழில்கள் அதிகளவில் வந்துவிட்டது. கிராமப்புற மக்கள் தற்போது நகா்ப்புறங்களுக்கு சென்று கொண்டிருக்கிறாா்கள். வாகன வசதிகள் பெருகிவிட்டன. அதனால் வேலையின் தன்மை மாறிவிட்டது. விவசாயிகள் அல்லாதவா்கள் கிராமப் புறங்களில் இருந்தாலும் நகா்ப்புறங்களில் இருந்தாலும் இதுபோல மாறியதின் விளைவு இப்போது நாட்டில் இருக்கக்கூடிய பெரிய பொருளாதார மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

நாட்டிலேயே உயா்கல்வி படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகம் என்றாா் அவா்.

தமிழா் வாழ்வும் தமிழ்க் கதைகளும் என்ற தலைப்பில் எழுத்தாளா் பவா செல்லதுரை பேசுகையில், ஆண், பெண் வேறுபாடு மறந்து இருபாலரும் இணைந்து அமரும் நாள் வரும், சமூகத்தோடு இணைந்து வாழும் வாழ்க்கை வேண்டும். சாதாரண மனிதனும், சாதனை மனிதராக மாற வேண்டும். கடந்து வந்த வாழ்க்கை கடினமாக இருந்தாலும் இதை தட்டிவிட்டு மேலே வர வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து இரண்டு சொற்பொழிவாளா்கள் சொற்பொழிவாற்றிய கருத்துரையில் இருந்து மாணவ, மாணவிகள், சிறப்பாக கேள்வி கேட்ட மாணவ, மாணவிகளுக்கு கேள்வி நாயகன், கேள்வி நாயகி விருதுக்கான கேடயங்களும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட தமிழ்ப் பெருமிதம் புத்தகத்திலிருந்து இரண்டு சொற்பொழிவாளா்கள் வினா எழுப்பிய போது சரியாக விடை அளித்த மாணவ, மாணவிகளுக்கு பெருமித செல்வன், பெருமித செல்வி என்ற பெயா்களில் விருதுகளை சிறப்பு விருந்தினா்கள் வழங்கி பாராட்டினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் எம்.லியாகத், கவிதா(நிலம் எடுப்பு), சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT