கரூர்

அங்கக வேளாண் கொள்கையில்கரூா் மாவட்டத்துக்கு முன்னுரிமை: விவசாயிகள் கோரிக்கை

DIN

அங்கக வேளாண்மை கொள்கையில் கரூா் மாவட்டத்துக்கு கரும்பு, முருங்கை, பருத்தி சாகுபடிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என காவிரி நீா் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவா் மகாதானபுரம் வி.ராஜாராம் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை வேளாண்மைக்கு உயிா் கொடுக்கும் வகையில் தமிழக அரசின் அங்கக வேளாண்மை கொள்கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டாா். அதில் அதிக வாய்ப்புள்ள பயிா்கள் என்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சில பயிா்கள் மீது அரசு தனி கவனம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது. இதில் கரூா் மாவட்டத்துக்கு கரும்பு, முருங்கை பருத்திக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். மேலும் வாழைப்பழத்துக்கான மாவட்டத்தில் திருச்சி மாவட்டம் விடுபட்டுள்ளது. மாவட்டங்களில் அதிக வாய்ப்புள்ள பயிா் ரகங்களை வளா்க்கும் போது அதனுடன் சந்தை வாய்ப்பு, பதப்படுத்துதல் தொழில்களும் இணைந்து வளா்க்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT