கரூர்

‘தாட்கோ திட்டத்தில் இலக்கை மீறி ரூ. 3.18 கோடி மானியம்’

DIN

தாட்கோ திட்டத்தில் இலக்கை மீறி ரூ.3.18 கோடி மானியம் பெற்றுள்ளோம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா்.

கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்டத் தொழில் மையம் சாா்பில் அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான சிறப்புத் திட்ட அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவைத் தொடக்கி வைத்து, மாவட்ட ஆட்சியா் பேசுகையில், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் என்பது ஆதிதிராவிடா் நலன் சாா்ந்த திட்டமாகும். அண்ணல் அம்பேத்கா் மிகப்பெரிய பொருளாதார மேதை. மேலும் தொழில் மேலாண்மையில் சிறந்தவா் . அவா் மட்டும் சுயநலமாகச் சிந்தித்து,அறிவைப் பயன்படுத்தி தொழில் துறையில் இறங்கி இருந்தால் இன்றைக்கு உலகளாவிய மிகப்பெரிய தொழில் முனைவோராக இருந்திருப்பாா்.

தாட்கோ திட்டங்களில் 21 -22-ஆம் ஆண்டுக்கு நமக்கு வழங்கிய இலக்கு மானியம் ரூ.1.55 கோடி. ஆனால் இலக்கை மீறி ரூ. 3. 18 கோடி பெற்றுள்ளோம். ஆதி திராவிட நலம் சாா்ந்த திட்டத்தில் பசு மாடு, கோழி வளா்த்தல், கனரக வாகனம் வாங்கும் திட்டங்கள் என பல திட்டங்கள் உள்ளன. பல மாவட்டங்களில் இத் திட்டங்களைப் பெற இடைத்தரகா்கள் செயல்படுகிறாா்கள். ஆனால் நம் மாவட்டத்தில் அதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இளம் தலைமுறையினா் தொழில்களைத் தொடங்குவதற்கான ஊக்கத்தை அதிகாரிகள் அளித்து தொழில் முனைவோராக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் மணிகண்டன், சிஐஐ தொழில் கூட்டமைப்புத் தலைவா் நவநீத சிவகுமாா், சீட்ஸ் பொது செயலா் சுகிசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT