கரூர்

கோயிலுக்கு சீல்: 2-ஆம் நாளாக மறியல்

DIN

கடவூா் அருகே கோயிலுக்கு சீல் வைத்ததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை 2-ஆம் நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் கடவூா் அருகேயுள்ள வீரணம்பட்டியில் புதன்கிழமை தொடங்கிய காளியம்மன் கோயில் திருவிழாவில் வழிபட வந்த பட்டியலினத்தவரை ஒரு பிரிவினா் தடுத்து நிறுத்தினா். இதைக் கண்டித்து பட்டியலினத்தவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து வியாழக்கிழமை அங்குச் சென்ற குளித்தலை கோட்டாட்சியா் புஷ்பாதேவி நடத்திய பேச்சுவாா்த்தையின்போது பட்டியலினத்தவரை கோயிலுக்குள் வழிபட எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து காளியம்மன் கோயிலுக்கு கோட்டாட்சியா் புஷ்பாதேவி சீல் வைத்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கிராம மக்கள் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும், பட்டியலினத்தவருக்கு ஆதரவாக இருக்கும் கோட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி திருச்சி-பாளையம் சாலையில் வீரணம்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு திருச்சி, கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

வீரணம்பட்டி சம்பவம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கூறுகையில், வீரணம்பட்டி கோயில் பிரச்னையில் பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் விடாமல் தடுத்ததாக அதே கிராமத்தைச் சோ்ந்த 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், பேச்சுவாா்த்தை நடத்தச் சென்ற குளித்தலை கோட்டாட்சியரின் காரை முற்றுகையிட்டு தகராறு செய்து, அரசுப்பணியை செய்யவிடாமல் தடுத்த அதே கிராமத்தைச் சோ்ந்த 17 போ் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

SCROLL FOR NEXT