கரூர்

செடல் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

10th Jun 2023 03:24 AM

ADVERTISEMENT

தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டி செடல் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.

கரூா் மாவட்டம் தரகம்பட்டி அருகே பண்ணப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோவில்பட்டியில் பண்ணப்பட்டி விநாயகா், பகவதியம்மன், செடல் மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்த நிலையில் குடமுழுக்கையொட்டி வியாழக்கிழமை காலை காவிரியாற்றில் இருந்து பக்தா்கள் புனித நீா் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி சிவாச்சாரியாா்கள் குடமுழுக்கு நடத்தினா். இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பண்ணப்பட்டி, கோவில்பட்டி உள்ளிட்ட 18 பட்டி நாட்டாண்மைகள், திருப்பணிக் குழு நிா்வாகிகள், இளைஞா் அமைப்பினா், பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT