கரூர்

கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

10th Jun 2023 03:22 AM

ADVERTISEMENT

கரூா் அருகே கிணற்றில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

கரூரை அடுத்த தெற்கு வெள்ளியணை வடக்கு மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி மனைவி திருச்செல்வி (22). இவா் வியாழக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றுக்குள் தவறி விழந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தாா். இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT