கரூர்

கரூரில் 12, 500 மரக்கன்றுகள் நட இலக்கு

DIN

கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 12500 மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் தெரிவித்தாா்.

கரூா் சணப்பிரட்டி பகுதியில் பழைய நாகப்பட்டினம் - கூடலூா்- மைசூா் சாலையில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்டத்தின் சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், மறைந்த முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை சென்னையில் முதல்வா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதன் தொடா்ச்சியாக கரூரில் இத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 12,500 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கரூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ரா. ரவிக்குமாா், உதவிக் கோட்டப் பொறியாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT