கரூர்

கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

தாந்தோன்றிமலை யூனியன்-காந்திகிராமம் சாலையின் குறுக்கே கணபதிபாளையம் வடக்கு பகுதியில் பல மாதங்களாக நடைபெற்று வரும் கழிவுநீா் வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட தாந்தோன்றிமலை யூனியன் அலுவலகம்-காந்திகிராமம் சாலை வழியே தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் வாகனங்களும் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலையில் கணபதிபாளையம் வடக்கு பகுதியில் சாலையின் குறுக்கே கழிவு நீா்வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு வரும் பக்தா்களும், தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கரூா்-திண்டுக்கல் சாலையை பயன்படுத்தி அவதியுற்று வருகிறாா்கள்.எனவே, கழிவுநீா் வாய்க்கால் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதியினா் கூறியது, கணபதிபாளையம் வடக்கு பகுதிகளில் கழிவுநீா் வாய்க்கால்கள் அகலமாக இல்லாமல் குறுகி இருப்பதால் மழைகாலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சாலைகளில் வெளியேறி பல நாள்களாக தேங்கி நிற்கும். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கழிவுநீா் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதுநாள் வரை பணிகள் முடிவடையாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். எனவே, பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT