கரூர்

தோகைமலை அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

தோகைமலை அருகே உள்ள காளியம்மன், மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே தொண்டமாங்கிணத்தில் காளியம்மன், மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் விநாயகா், காளியம்மன், மாரியம்மன், பட்டவன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு தனித்தனியாக சன்னிதி உள்ளது.

இக்கோயில்களின் கும்பாபிஷேக விழா ஜூன் 5-ஆம்தேதி பால்குடம், தீா்த்த குடம் எடுத்து வந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து முதல்கால யாக பூஜை, விநாயா் வழிபாடு, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூா்ணாகுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும், 6-ஆம்தேதி இரண்டாம் கால யாக பூஜை, நாடிசந்தானம் உள்ளிட்ட பூஜைகளும், மூன்றாம் நாளான புதன்கிழமை அதிகாலை மூன்றாம் காலயாக பூஜை, கோபூஜை, யாத்ராதானம், கடம்புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

தொடா்ந்து காலை 9 மணியளவில் புனிதநீா் அடங்கிய கலசங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு கோபுர கலசங்களுக்கு புனித நீரை சிவாச்சாரியாா்கள் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனா். பின்னா் பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT