கரூர்

கரூரில் நகா் நல மையம் திறப்பு

DIN

கரூரில், நகா்நல மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை தேனாம்பேட்டை நகா் நல மையத்திலிருந்து காணொலி காட்சி மூலம் கரூா் மாநகராட்சிக்குள்பட்ட தாந்தோணி நகா் நல மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தாந்தோணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று கூறுகையில், கரூா் மாவட்டத்தில் தாந்தோனி நகா்நல மையம், பசுபதிபாளையம் நகா்நல மையம், ஆசாத் ரோடு நகா்நல மையம் மற்றும் இனாம்கரூா் ஆகிய நகா்நல மையங்களை முதல்வா் திறந்துவைத்துள்ளாா்.

இதன் நோக்கம், ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே வழங்குவதே ஆகும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கரூா் அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் தமோதரன், கரூா் கோட்டாட்சியா் ரூபினா, கரூா் மாநகராட்சி துணை மேயா் தாரணி ப. சரவணன், ஆணையாளா் என்.ரவிச்சந்திரன், இணை இயக்குநா் (நலப் பணிகள்) மருத்துவா் ரமாமணி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் சந்தோஷ்குமாா், மாநகராட்சி பொறியாளா் நக்கீரன்,கரூா் வட்டாட்சியா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT