கரூர்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கரூா் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

7th Jun 2023 01:33 AM

ADVERTISEMENT

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கரூரில் அரசு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் தொல்லைக் கொடுத்த பாஜக எம்.பி.யை கைது செய்யக்கோரி கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் சி.கண்ணன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் ஞானதம்பி, செல்வராணி, மாவட்டச் செயலாளா் கே.சக்திவேல், பொருளாளா் பொன்.ஜெயராம் ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT