கரூர்

மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிக்கு உதவிய ஆட்சியா்

DIN

கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் திங்கள்கிழமை மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியா் த.பிரபுசங்கா் உதவி செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பஞ்சப்பட்டி வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த கோயில் பூசாரி பாலமுருகன் (35) என்ற மாற்றுத்திறனாளி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தாா். அப்போது அவா் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தில் அமா்ந்திருந்தாா். மாவட்ட ஆட்சியா் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்தபோது, திடீரென பாலமுருகன் மயங்கி இருக்கையில் சாய்ந்தாா். இதனைக்கண்ட ஆட்சியா் உடனே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அவரை கரூா் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்று உரிய பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT