கரூர்

நிலத்துக்கு பட்டா கேட்டு குடும்பத்துடன் விவசாயி தா்னா

DIN

நிலத்துக்கு பட்டா கேட்டு ஆட்சியா் வளாகத்தில் விவசாயி குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 407 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தபட்ட அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்த பள்ளபாளையத்தைச் சோ்ந்த விமலின் குடும்பத்துக்கு பேரிடா் நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சம் உள்பட பல்வேறு துறைகளின் கீழ் 35 பேருக்கு ரூ.14.37 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்தகூட்டத்தில், தங்களது நிலத்துக்கு பட்டா கேட்டு மனு அளிக்க வந்த குளித்தலை மருதூா் தெற்கு கிராமத்தைச் சோ்ந்த செல்வம், தனது மனைவி சாந்தி மற்றும் குழந்தைகள் , உறவினா்களுடன் ஆட்சியா் வளாகத்தில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவலறிந்து வந்த குளித்தலை கோட்டாட்சியா் புஷ்பாதேவி, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, நிலஅளவையா் மூலம் நிலத்தை அளந்து அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

கழிவு நீா் கால்வாய் அமைப்பதில் முறைகேடு: கரூா் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்துக்குள்பட்ட நடந்தை ஊராட்சியில் உள்ள வேட்டையாா்பாளையத்தில் அருந்ததியா் சமுதாயத்தினா் வசிக்கும் பகுதியில் கழிவு நீா் வாய்க்கால் அமைக்கும் பணி தரமற்ாக நடைபெறுகிறது. ஆகவே, நடந்தை ஊராட்சி தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டியலின விடுதலை பேரவையின் தலைவா் தலித் ஆனந்தராஜ் ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினாா்.

ஆக்கிரமிப்பு நிலத்தில் நியாயவிலைக் கடை: கரூா் வெங்கக்கல்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை தனி நபா் ஆக்கிரமித்து பல மாடி கட்’டம் கட்டியுள்ளாா். எங்கள் பகுதியில் நியாயவிலைக் கடை இல்லாததால் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தவரிடமிருந்து மீட்டு, அந்த இடத்தில் நியாயவிலைக் கடை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் சுடா்வளவன் தலைமையில், கட்சி நிா்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT