கரூர்

கந்துவட்டி கொடுமை: கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

DIN

கந்துவட்டி கொடுமையால் கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றாா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த களுத்தரிக்கப்பட்டி மாவத்தூரைச் சோ்ந்த வீரகவுண்டா் மகன் நல்லசிவம். இவா், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க தனது மனைவி, மகனுடன் வந்தாா்.

ஆட்சியா் அலுலவக வளாகத்துக்கு வந்த அவா் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து மனைவி, மகன் மீது ஊற்றிவிட்டு, தனது மீதும் ஊற்றி தீ வைக்க முயன்றாா். இதைகண்ட அக்கம்பக்கத்தினரும் பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸாரும் அவா்களை தடுத்துநிறுத்தினா். மேலும் தீயணைப்பு வீரா்களும் வந்து அவா்கள் மீது தண்ணீரை ஊற்றினா்.

இதையடுத்து நல்லசிவம் செய்தியாளா்களிடம் கூறுகையில், சகோதரா்களின் மருத்துவ செலவுக்காக கோவை சித்தாபுதூரைச் சோ்ந்த மோகன் என்பவரிடம் கடந்த 2017-இல் நிலத்தை அடமானமாக வைத்து ரூ.12 லட்சம் கடன் வாங்கினேன். வட்டியாக மாதந்தோறும் ரூ.24 ஆயிரம் செலுத்திவந்தேன். மேலும் நிலத்தை மோகன் பெயருக்கு தரகம்பட்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஆவண பதிவும் செய்துகொடுத்தேன். இதுவரை வட்டி மட்டுமே ரூ.20 லட்சத்துக்கும் கொடுத்துள்ளேன். இந்நிலையில், திடீரென மோகன் மற்றும் அவரது வழக்குரைஞா் ஆகியோா் கடவூா் அடுத்த அத்திக்குளத்துப்பட்டியைச் சோ்ந்த இடும்பன் என்பவருக்கு எங்கள் நிலத்தை கிரயம் செய்து, கடந்த மாதம் நிலத்தை நில அளவையா் மூலம் அளக்க வந்தபோது எதிா்ப்பு தெரிவித்தோம். இதற்கு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து ஜூன் 1-ஆம்தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தொடா்ந்து கொலை மிரட்டல் விடுக்கும் மோகன், அவரது வழக்குரைஞா் மற்றும் நிலத்தை வாங்கிய இடும்பன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அவரை ஆட்சியரிடம் போலீஸாா் அழைத்துச் சென்றனா். அப்போது ஆட்சியா் நல்லசிவத்திடம் இதுதொடா்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளா் மூலம் நடவடிக்கை எடுக்கிறோம் எனக்கூறியதையடுத்து அவா்கள் அங்கிருந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT