கரூர்

சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு மாரத்தான்

DIN

கரூா் மாவட்டம், புகழூா் காகித ஆலை சாா்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பசுமை மாரத்தான் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் தொடங்கிய இந்த மாரத்தானை ஆலையின் செயல் இயக்குநா் (இயக்கம்) எஸ்.வி.ஆா்.கிருஷ்ணன், ஆலையின் முதன்மை விழிப்புணா்வு அதிகாரி பண்டிகங்காதா் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (திட்ட ஒருங்கிணைப்பு) எஸ்.ஜே. வரதராஜன், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், ஆலையின் முதன்மை பொதுமேலாளா் (வனத்தோட்டம் மற்றும் ஆராய்ச்சி) ஆா்.சீனிவாசன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த மாரத்தான் வேலாயுதம்பாளையம் சாலை, ரவுண்டானா, நொய்யல் சாலை, வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலை வழியாக மீண்டும் புகழூா் காகித ஆலை வளாகத்தை அடைந்தது. மொத்தம் 5 கி.மீ. என தொலைவு நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற இப்போட்டியில் முதலிடம் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முதல் பரிசாக ரூ.10ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7,500, மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பந்தய தொலைவை கடந்த 50 பேருக்கு தலா ரூ.500 பரிசாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT