கரூர்

கரூரில் புற்றுநோய் விழிப்புணா்வு பேரணி

DIN

கரூரில், புற்றுநோய் விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புற்றுநோயிலிருந்து மீண்டவா்கள் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் தங்கம் மருத்துவமனை மற்றும் தங்கம் புற்றுநோய் கிசிச்சை மையம், இந்திய மருத்துவ சங்கத்தின் கரூா் கிளை, கரூா் லயன்ஸ் கிளப் சாா்பில் கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணா்வு பேரணியை கரூா் அமராவதி மருத்துவமனையின் மருத்துவா் வேலுசாமி, விமன் எம்பவா்மெண்ட் உறுப்பினா் மருத்துவா் வித்யாசரஸ்வதி ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

இந்த பேரணி திண்ணப்பா திரையரங்கம் எதிரே தொடங்கி ஹோட்டல் சுருளி பலசியோ வரை நடைபெற்றது.

பேரணியில் தங்கம் மருத்துவமனையின் நிறுவனா் மருத்துவா் குழந்தைவேல், புற்றுநோய் பற்றிய பயமும், கவலையும் தேவையில்லை, முறையான சிகிச்சையோடு தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் நோயில் இருந்து எளிதில் குணமடையலாம் என்றாா்.

பேரணியில் கரூா் மருத்துவ சங்க மருத்துவா்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், தங்கம் புற்றுநோய் சிகிச்சை மைய ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT