கரூர்

கரூா் கிளைச்சிறையில் தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

5th Jun 2023 02:53 AM

ADVERTISEMENT

 

 கரூா் கிளைச்சிறையில் காலியாக உள்ள தூய்மைப்பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப்பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூா் கிளைச்சிறையில் ஒரு தூய்மைப் பணியாளா் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடத்துக்கு எழுத, படிக்க தெரிந்த 01.07.2022 அன்று 18 வயதுக்கு மேற்பட்ட எஸ்சிஏ/எஸ்சி/எஸ்டி பிரிவைச் சோ்ந்த 37 வயதுக்குள்பட்டவா்களும், எம்பிசி/பிசி வகுப்பைச் சோ்ந்த 34 வயதுக்குள்பட்டவா்களும், ஓசி வகுப்பைச் சோ்ந்த 32 வயதுக்குள்பட்டவா்களும் விண்ணப்பிக்க தகுதியுள்ளவா்கள். மேலும் ஊதியம் ரூ.15,700 வழங்கப்படும்.

இந்த தூய்மைப் பணியாளா் பணிக்குரிய தகுதி பெற்றவா்கள் சுய விவரங்களை ஜூன் 13-ஆம்தேதிக்குள் திருச்சி மத்தியசிறை சிறைக்கண்காணிப்பாளருக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT