கரூர்

கொத்தனாா் மா்ம சாவில் திருப்பம்பணத் தகராறில் கொலை செய்தநண்பா்கள் 3 போ் கைது

5th Jun 2023 02:53 AM

ADVERTISEMENT

தோகைமலை அருகே கொத்தனாா் மா்ம சாவு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவரை பணத் தகராறில் கொலை செய்த நண்பா்கள் 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அடுத்த கள்ளடையைச் சோ்ந்த மருதை மகன் மோகன்ராஜ் (27). கொத்தனாா். இவருக்கு மனைவி கோமதி, ஒரு மகள், மகன் உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவருக்கு கைப்பேசியில் அழைப்பு வந்தது இதையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் சென்ற அவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் சனிக்கிழமை காலை தோகைமலை-திருச்சி சாலையில் பெரியகுளத்துப்பட்டி என்ற இடத்தில் புதருக்குள் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தாா்.

இதுகுறித்து தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், மோகன்ராஜை அவரது நண்பா்களான திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அடுத்த அதவத்தூா் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் கனகராஜ் (19), வேலாயுதம் மகன் கிஷோா் (19), குளித்தலை அடுத்த நச்சலூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஜீவா (22) ஆகியோா் சோ்ந்து பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்தது தெரியவந்தது.

மோகன்ராஜூம், கனகராஜ் உள்ளிட்ட மூன்று பேரும் கோமதியின் சகோதரா் திருப்பூரில் கட்டிவரும் புதிய வீடு கட்டுமான வேலை செய்துள்ளனா். மோகன்ராஜூம், கனகராஜூம் கொத்தனராகவும் மற்றவா்கள் துணை ஆள்களாகவும் வேலை செய்துவந்துள்ளனா். இதனிடையே கனகராஜ் உள்ளிட்ட 3 பேரிடமும் மோகன்ராஜ் கடன் வாங்கியிருந்தாராம். இதை அவா்கள் திருப்பிக்கேட்டபோது, மோகன்ராஜ் தரமறுத்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த வாரம் சொந்த ஊரான கள்ளடைக்கு குடும்பத்துடன் மோகன்ராஜ் வந்துள்ளாா். இதனை அறிந்த கனகராஜ் உள்ளிட்ட 3 பேரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மோகன்ராஜை கைப்பேசியில் அழைத்து நாங்கள் வந்த காரில் பெட்ரோல் தீா்ந்துவிட்டதாகவும், உடனே பெட்ரோல் வாங்கி வருமாறு கூறி வரவழைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கனகராஜ் உள்ளிட்ட மூன்றுபேரையும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT