கரூர்

அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடுநடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

5th Jun 2023 02:54 AM

ADVERTISEMENT

 

கரூா் மாவட்டம், செல்லாண்டி பாளையத்தில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உடனே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் திருமாநிலையூா்-சுக்காலியூா் சாலையில் உள்ள செல்லாண்டிபாளையம் பகுதியில் குடியிருப்புகளில் இருந்து சுகாதாரப் பணியாளா்களால் பெறப்படும் குப்பைகள் மூட்டை, மூட்டையாக கட்டப்பட்டு அவை செல்லாண்டிபாளையம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல வெண்ணைமலை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில் கரூா்-சேலம் பழைய தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் குவியலாக வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஒரு வாரத்துக்கும் மேலாக குப்பைகள் மூட்டைகளாக வைக்கப்படுவதால் அவற்றில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் அப்பகுதியினருக்கு சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை சாலைகளில் மூட்டைகளாக தேக்கி வைக்காமல் உடனே அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் சிலா் கூறுகையில், கரூரில் ஆண்டாங்கோவில், வெண்ணைமலை, சுக்காலியூா், செல்லாண்டிபாளையம் பகுதியில் துப்புரவு சுகாதாரப் பணியாளா்களால் சேகரிக்கப்படும் குப்பைகள் மூட்டைகளாக கட்டப்பட்டு அவை மாநகராட்சி லாரிகள் மூலம் அரசு காலனியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் மாநகராட்சியில் தற்போது குப்பைகள் கொண்டு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் குப்பைகளை கிடங்கிற்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதால் அவை சாலைகளின் ஓரம் மூட்டையாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் துா்நாற்றம் வீசி வருகின்றன. எனவே, மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT